குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து ஓங்கி அடித்த நண்பன்… ரத்த வெள்ளத்தில் சுருண்ட கொத்தனார்..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 5:01 pm

திருச்சியில் குடி போதை தகராறில் கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி உறையூரை சேர்ந்தவர் குணசேகர் (55). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவி, விஜயகுமார், தர்மா என்ற இரு மகனும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் தனியாக வசித்து வந்தார். குணசேகர் குடிப்பழக்கம் காரணத்தால் அதிக அளவில் மது குடித்துவிட்டு சாலை ஒரத்தில் உறங்கி விடுவார்.

இந்த நிலையில், நேற்றிரவு குணசேகர் உறையூர் அடுத்துள்ள ராமலிங்க நகர் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு கைகலப்பாக மாறியதன் காரணத்தால், மது குடித்தவர்கள் குணசேகரனை அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் குணசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த குறித்து தகவல் அறிந்த உறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 472

    0

    0