திருச்சி ;திருச்சியில் சிறப்பு முகாம் உள்ள சிறைவாசிகள் நேற்று இரவு சுவர் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாம் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் மற்றும் இலங்கை தமிழர் சுமார் 100 பேரும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கு இருந்தவர்கள் பயன்படுத்திய 155 செல்போன்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் திரும்ப வழங்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகாமில் சிலர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு திடீரென மயங்கினர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் இலங்கை தமிழர்கள் திடீரென முகாம் சுவரின் மீது ஏறி வழக்கு முடிந்து ஓரிரு நாட்களில் சொந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறோம். எனவே, எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை, ஒப்படைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உதவி ஆணையர் காமராஜ் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கீழே இறங்கினார்கள். இச்சம்பவத்தால் சிறப்பு முகாம் வளாகத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய சிறை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.