திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தூய்மைப் பணியாளர் தூக்குபோட்டு தற்கொலை… கோவில் நடை அடைப்பு.. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 10:02 am

திருச்சி மலைக்கோட்டையில் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் வடக்கு தெரு மங்கம்மாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 7 வருடம் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த 1 வருடம் முன்பு பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.

நேற்று இரவு கோவில் அலுவலகத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கோவிலுக்கு சென்ற போது, அலுவலகத்தில் ஜெகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெகன் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை பணியாளராக பணியாற்றிய ஜெகன் தற்கொலை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைக்கு பின்னர் 12 மணி அளவில் கோவில் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 646

    0

    0