கோவை தொகுதிக்கு அண்ணாமலையை வேட்பாளராக அறிவித்ததில் மகிழ்ச்சி என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ என்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்நிலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- நான் இன்னும் கத்துக்குட்டி தான், நேரடி அரசியலில் வந்து 4 ஆண்டுகள் தான் ஆகிறது. வைகோவை போல் நான் செயல்பட முடியுமா என்றால் முடியாது தான். தொடர்ந்து பலவற்றை கற்றுக்கொண்டு வருகிறேன்.
கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அளிவித்துள்ளது சந்தோசம் மகிழ்ச்சி அதனை நான் வரவேற்கின்றேன், பாஜக வளர்ந்துவிட்டது செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று கூறி திராவிட கட்சிகளை கொச்சையாக அண்ணாமலை பேசி வந்தார்.
தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதால் பாஜகவுக்கு என்ன செல்வாக்கு இருக்க போகிறது அண்ணாமலைக்கு என்ன செல்வாக்கு இருக்க போகிறது என்பது தெரியவரும். தேர்தலில் அவர்கள் நிற்பதால் என்ன நடக்க போகிறது என்பது தெரியும். நான் நேரடியாகவே சவால் விட்டேன். அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று தற்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. மக்களின் மனநிலை எனக்கு தெரியும், அவர்களின் சாயம் வெளுக்கப் போகிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இரண்டு இரண்டு சீட்கள் என்று ஒதுக்கிவிட்டு மதிமுகவுக்கு ஒரு சீட் என்று அறிவிக்கும் போது மதிமுக தொண்டர்களுக்கு வருத்தம் இருந்தது தான். ஆனால் மதிமுக சொந்த சின்னமான பம்பரம் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதற்கு முன் மக்கள் நல கூட்டணியில் மதிமுக பம்பரம் சின்னத்தில் நின்று வெற்றி பெறவில்லை, தற்போது சொந்த சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது, பம்பரம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்காவிட்டால் பொது சின்னத்தில் போட்டியிடும் நிலை உள்ளது.
வாரிசு அரசியலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. ஓபிஎஸ் முன்னாள் முதலமைச்சர் மூத்த அரசியல்வாதி தனிப்பட்ட முறையில் அவரை மதிக்கிறேன், தற்போது அவர் பாஜக கூட்டணியில் உள்ளார் அவருக்கு ஏன் இடங்களை பாஜக ஒதுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை அதை அண்ணாமலை இடம்தான் கேட்க வேண்டும், என்று தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.