அறிஞர் அண்ணா 53வது நினைவு தினம் ; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள்…
Author: kavin kumar3 February 2022, 2:22 pm
திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். வருடம் தோறும் திருச்சி சிந்தாமணி உள்ள அண்ணா சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த வருடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.