இனி திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 3:29 pm

திருச்சி, சேலம், நெல்லை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு பணிகள் ஒருசில மாதங்களில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் முதல்கட்டமாக 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது.

சென்னையை போல் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தப்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயிலுக்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!