முருகன் பாடலுக்கு ஆபாச நடனம்… திருச்சி சாதனாவின் அடுத்த சர்ச்சை : வைரலாகும் வீடியோவால் எழுந்த வில்லங்கம்..!!

Author: Babu Lakshmanan
15 August 2022, 1:26 pm

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி நச்சலூர் பகுதியினை சார்ந்தவர் சாதனா. இவர் திருச்சி சாதனா என்கின்ற பெயரில் டிக்டாக் மூலம் அறிமுகமாகி, பின்னர் யூடியூப் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை அரங்கேற்றி, இரட்டை அர்த்தங்கள் உள்ள வார்த்தைகளும், ஆபாசமாக கூறப்பட்டு வந்த சாதனா அசிங்கமாகவும் வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார். இவரது பல வீடியோக்கள் சமூக வலைத்தளவாசிகளை அதிர வைத்தது.

இதுகுறித்து நச்சலூர் கிராம மக்கள், கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை கடந்த மே மாதம் அனுப்பியிருந்தனர். அதில், ‘கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மே 8 ம் தேதி இனி ஆபாசமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று குளித்தலை காவல்துறையிடம் எழுதிக்கொடுத்து விட்டு அதனையும் பேட்டியாக அவர் பதிவிட்டார். ஆனால், சில நாட்கள் அமைதியாக இருந்த திருச்சி சாதனா, தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளார்.

முதலில் ஆபாச நடனம் ஆடி வந்த அவர் தற்போது பெரிய அளவிலான சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். முருகப்பெருமானின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலின் ரீமிக்ஸ் ஒன்றுக்கு கண்டமேனிக்கு ஆபாச நடன அசைவுகளுடன் அவர் நடனமாடி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ