30 நாளைக்கு சத்து மாத்திரை கொடுத்த பள்ளி … 9ம் வகுப்பு மாணவனின் வீபரீத செயல் ; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 4:47 pm

திருச்சியில் பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில்) 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு சார்பில் வழங்கிய சத்து மாத்திரைகளை தினசரி ஒன்றாக 30 நாட்கள் சாப்பிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினமே 10 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்று இரவே உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில்இன்று சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார்.

தகவல் தெரிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?