ஆபாசமாக திட்டிய ஆசிரியர்…. வேதனையில் ஹாஸ்டலுக்கு திரும்பிய பிளஸ் 2 மாணவி ; பதறிப் போய் பள்ளிக்கு வந்த பெற்றோர்..!

Author: Babu Lakshmanan
18 October 2023, 12:44 pm

திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவியை ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரில் உள்ளது செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இந்த பள்ளியில் ஆயிரம் கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதியில் கட்டாயமாக தங்கி படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளது.

குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளி ஆசிரியர் வினோத் என்பவர் மாணவியை சக மாணவிகளுக்கு முன்பு ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமடைந்த மாணவி அறையில் வைத்திருந்த 7 பாராசிட்டமல் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்தும், வெளியில் தெரியாமல் மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் மாணவியை சேர்த்துள்ளனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 452

    0

    0