பகலில் டீச்சர்… இரவில் செக்ஸ் டார்ச்சர்.. மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை கைது..!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 9:51 am

திருச்சி ; 10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணக்கு ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி – உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதுபோக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது வீட்டில் டியூசன் எடுத்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில், அவரிடம் டியூசன் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை தேவி நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. மாணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர், மகனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

அப்போது, இரவு நேரங்களில் அந்த மாணவர் ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும் தெரியவந்தது. அதோடு, அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 6985

    41

    33