திருச்சி ; 10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணக்கு ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி – உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதுபோக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது வீட்டில் டியூசன் எடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரிடம் டியூசன் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை தேவி நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. மாணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர், மகனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
அப்போது, இரவு நேரங்களில் அந்த மாணவர் ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும் தெரியவந்தது. அதோடு, அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டு உள்ள நிலையில், நேற்று மாலை டெல்லி சென்று இன்று அதிகாலையே சென்னை திரும்பியிருக்கிறார் அமைச்சர் செந்தில்…
சென்னையில், இன்று (மார்ச் 19) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 290…
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேற்கு தாம்பரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இப்தார்…
தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.…
டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…
குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…
This website uses cookies.