முன்பே எச்சரித்தும் இந்து அறநிலையத்துறை அலட்சியம் ; ஸ்ரீரங்கம் கோவில் சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 12:56 pm

திருச்சி ; திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்குப் பகுதி கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் 21 பெரிய கோபுரங்கள் உள்ளது. ஒவ்வொரு கோபுரங்களிலும் ஒரு சிறப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது
பிற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதரை தரிசனம் செய்து கோபுரங்களையும் வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தில் உள்ள நிலைகளில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு கீழே விழும் அபாயம் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக உடனடியாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.50 மணி அளவில் கிழக்கு கோபுரம் இரண்டாவது அடுக்கு சுவர் விரிந்து விழுந்தது.

விரிசல் விழுந்த புனரமைக்கக் கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கோயில் நிர்வாகத்தையும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் போஜராஜன் தலைமையில் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக கூறினர். ஆனால் இணை ஆணையரை பார்த்து விட்டு தான் செல்வோம் என தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் இணைய ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் மனோஜ்குமார், சுரேஷ்பாபு மாவட்ட செயலாளர், மணிகண்டன் திருச்சி மாநகர மாவட்ட பேச்சாளர், ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஹிந்து முன்னணி அமைப்புனரின் போராட்டத்தால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 67 லட்ச ரூபாய்டெண்டர் கோரப்பட்டது. ஆனால் டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோபுரம் முழுவதுமாக புனரமைப்பு பணியை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

பணியை மேற்கொள்வதற்காக தற்போது சாரம் கட்டும் பணியும் தொடங்கியுள்ளது. இன்று தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ