திருச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் : கொலை வழக்காக பதிய கோரிக்கை.. ஆட்சியரை சந்தித்தி பின் குடும்பத்தினர் பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 10:07 pm

திருச்சி : திருவெறும்பூர் மாணவியின் மரணம் கொலை வழக்காக மாற்றப்படவேண்டும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சி சந்தித்தபின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (வயது 19) . இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி, வித்யாலட்சுமி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக பிளக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த மூன்று நபர்கள் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகவும், இதனால் தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தாய் சாந்தி பெல் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிந்து மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் போலீசாரை கண்டித்து உடலை வாங்க மறுத்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் இன்று காலை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அம்மாணவி பெற்றோர், உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் திடீர் முற்றுகையிட்டனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்த பின்னர் கிராம மக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பார்க்க உள்ளோம்.

306 பிரிவில் தற்போது வழக்கு பதிந்துள்ளனர். கண்டிப்பாக 302 கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி உள்ளோம். 3 பேரையும் கைது செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளனர்

தற்கொலை வழக்கு அல்ல கொலை வழக்காக இதை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பிரேத பரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்திருந்தால் அதனை பரிசோதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் அப்படி இல்லை என்றால் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என தெரிவித்தனர்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 1070

    0

    0