அண்ணாமலை பைல்ஸ் 1.. DMK Files 3-க்கு பதில்? திருச்சி சூர்யா பரபரப்பு பதிவு!

Author: Hariharasudhan
10 December 2024, 6:44 pm

பாஜகவில் இருந்து இரண்டு முறை நீக்கப்பட்ட திருச்சி சூர்யா (Trichy Suriya), அண்ணாமலை பைல்ஸ் 1 வெளியிட உள்ளதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

திருச்சி: திமுக மாநிலங்களவை எம்பியான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா (Tiruchi Suriyaa). இவர் முன்னதாக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் பொதுச் செயலாளராக இருந்தார். அதற்கு முன்னதாக, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா, மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை – மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இடையில் கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியான நிலையில் அண்ணாமலை தமிழிசை வீட்டுக்குச் சென்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Trichy Suriya on Annamalai Files 1

அது மட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக இனி யாரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட வேண்டாம் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார். ஆனால், தமிழிசை சவுந்தர்ராஜன் குறித்து திருச்சி சூர்யா சிவா கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்களம் விளைவிக்கும் செயல்களில் திருச்சி சூர்யா ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாவது முறையாக பாஜகவில் இருந்து சூர்யா சிவா நீக்கப்பட்டார்.

தற்போது அவர், பல்வேறு யூடியூப் பேட்டிகளில் பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பேசி வருகிறார். இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவா வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை பைல்ஸ்-1 வெளியிடப்படும். (இதில் நானே என் தனிப்பட்ட முயற்சியில் சேகரித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன்).

Tiruchi Suriya says Annamalai Files 1 release soon

ஊழலை ஒழிப்பேன் என்ற பெயரில், ஊழல் பேர்வழிகளிடம் மிரட்டி பணம் பறித்து சொத்து சேர்த்த விவரங்கள் மற்றும் அண்ணாமலையை அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்களான அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவரங்கள் இந்த ஃபைல்சில் கண்டிப்பாக இடம்பெறும்” எனத் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை (Annamalai K), “திமுக பைல்ஸ் 1 மற்றும் 2 aஆகியவற்றை இதுவரை வெளியிட்டு உள்ளோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் திமுக பைல்ஸ் 3 (DMK Files 3) வெளியிடப்படும். அதில் திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் பெற்ற லாபங்கள் குறித்தும் அம்பலப்படுத்தப்படும்” எனக் கூறி இருந்தார்.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 87

    0

    0

    Leave a Reply