‘பட்டா கத்தி தான் இருக்கு.. பணம் இல்ல’… கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற இளைஞர்கள்!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 7:30 pm

திருச்சியில் அரசு மதுபானக் கடையில் கத்தி முனையில் மதுபாட்டில்களை இளைஞர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 177 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 3 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சி திருவானைக்காவலில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான கடையில் இரு வாலிபர்கள் மது வாங்குகின்றனர். அப்போது விற்பனையாளர் மது பாட்டிலை கொடுத்து காசு கேட்கும் பொழுது, அவரிடம் வம்பு செய்யும் அந்த இளைஞர்களில் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டுகிறார்.

காசு கொடுக்க முடியாது என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து Tasmac மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 17, 18 வயதிற்கு உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற மிரட்டல் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் தொடர்கதையாகி வருவதாகவும், எனவே தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!