காதலியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயற்சி : சிக்கிய வடமாநில இளைஞர்… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 12:48 pm

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில், தன்னிடம் பேச மறுத்த காதலியை கத்தரிகோலால் குத்தி கொலை செய்ய முயற்சித்த வடமாநில பனியன் தொழிலாளி கைது.

திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்த நியூ திருப்பூர் பகுதியிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வருபவர்கள் ஓரிசா மாநி்லத்தை சேர்ந்த பிராஞ்சி டக்ரி(வயது 30) மற்றும் ரோஜனி டக்கரி (வயது 26). இதில் பிராஞ்சி டக்ரிக்கு, சுபலயா டக்ரி (வயது 27) என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் பிராஞ்சி டக்ரி தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி, ரோஜனி டக்கரியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஜனி டக்கரி, பிராஞ்சி டக்ரி கேட்டு வந்துள்ளார்.

ஆனால் பிராஞ்சி டக்ரி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து பிராஞ்சி டக்ரி உறவினர்கள் மூலமாக அவருக்கு திருமணமானது ரோஜனி டக்கரிக்கு தெரிய வர அவருடன் பழகியதை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிராஞ்சி டக்ரி பனியன் கம்பெனியில் நேற்று பணி புரிந்து கொண்டிருந்த போது ரோஜனி டக்கரியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் ரோஜனி டக்கரி பேச மறுக்கவே, கோபமடைந்த பிராஞ்சி டக்ரி கத்தரிகோலால் ரோஜனி டக்கரியின் கைகளை குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ரோஜனி டக்கரியை அவினாசி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் பிராஞ்சி டக்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1148

    0

    0