திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி… இனி மன்னிப்பே கிடையாது : வீடியோ ஆதாரங்களுடன் கோர்ட் படியேறும் மன்சூர் அலிகான்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 1:42 pm

திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி… இனி மன்னிப்பே கிடையாது : வீடியோ ஆதாரங்களுடன் கோர்ட் படியேறும் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!

11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய ‘உண்மை வீடியோவை’ தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவைத்தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, த்ரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது!

உண்மை வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்! நன்றி! -நடிகர் மன்சூர் அலிகான்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!