கோவையில் கோர விபத்து: கார் மீது மோதிய டிப்பர் லாரி…புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!
Author: Rajesh16 February 2022, 12:21 pm
கோவை: கோவை அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை சுந்தராபுரத்திலிருந்து தேனி செல்வதற்காக புது மண தம்பதிகள் ஷாம்பிரசாத் (28), அவரது மனைவி சுவாதி (24), ஷாம் பிரசாத்தின் தாயார் மஞ்சுளா, தந்தை சௌடையன் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் ஈச்சனாரி மேம்பாலத்தின் மேல் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஷாம்பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுவாதி மஞ்சுளா சௌடையன் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மஞ்சுளா சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது சுவாதி மற்றும் சவுடையனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.