லாரி ஓட்டுநரை பட்டாகத்தியால் பதம் பார்த்த கும்பல்.. மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பரபரப்பு : நடுங்கிய வேலூர்!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2024, 9:48 pm
வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணாட்சி (எ) முத்துகிருஷ்ணன் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார் இன்று காலை லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சத்துவாச்சாரி நோக்கி வந்து கொண்டிருந்தார்
இந்த நிலையில் சத்துவாச்சாரி ஆவின் அருகே சர்வீஸ் சாலை வந்த போது லாரி பழுதானது இதனால் லாரியை முத்துகிருஷ்ணன் அருகே உள்ள மெக்கானிக் ஷாப் அருகில் நிறுத்தியுள்ளார் பின்னர் அவரும் கிளினரும் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது அதே சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென முத்துக்கிருஷ்ணனை சுற்றி வளைத்து சராமாரியாக கத்தியால் வெட்டியது
இதில் தலையிலும் கைகளிலும் வெட்டுப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் கைவிரல்கள் துண்டானது அதே நேரத்தில் தாக்குதலை நடத்திய கும்பல் மின்னல் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர்
இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்து கீழே சாய்ந்த முத்துகிருஷ்ணனை உடனடியாக அங்கு இருந்து அவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவம் ஏரியூரில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறு தொடர்பாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணாமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்மகும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்
மேலும் படிக்க: நீதிமன்றம் சொன்ன 6 மாதம்.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்..!!
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கைகளில் பட்டாக்கத்தியுடன் வந்து லாரி ஓட்டுநரை கையில் பட்டாகத்திகளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது