அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் : 1000 தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 2:47 pm

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துறைமுக பச்சை நுழைவாயிலில் முன்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் இரு பக்கங்களிலும் உள்ளே செல்லும் இடமும் வெளியே வரும் வழியில் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் போக்குவரத்து ஆயிரம் லாரிகள் நிற்கின்றன. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இவர்களது கோரிக்கையான ஓட்டுனர்களுக்கு குடி தண்ணீர், கழிப்பிடம் தங்குமிடம் மற்றும் சரக்கு இறக்குவது தாமதம் ஏற்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் டிரைவர்கள் ஈடுபட்டுள்ளனர் .

இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் இல்லாவிட்டால் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் பங்களா முன்பு முற்றுகையிடுவோம் என அறிவித்துள்ளனர்.

துறைமுகம் உள்ளே 300 லாரிகளும், துறைமுகத்திற்கு வெளியே 500க்கும் மேற்பட்ட லாரிகளும் நிறுத்தி தொழிலாளர்கள் 1000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் துறைமுகத்திற்கு பல கோடி பண பரிவத்தனை இழப்பு ஏற்பட்டு உள்ளன.

அகில இந்திய மத்திய சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சகாயம் மாநில தலைவர் சங்கர் பாண்டியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட் உறுதியளித்ததின் பேரில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!