நேருக்கு நேர் மோதிய லாரிகள்…டீசல் டேங்க் வெடித்து சிதறி விபத்து : உடல் முழுவதும் தீயுடன் குதித்த ஓட்டுநர் பலி.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2022, 1:04 pm
திருப்பூர் : ஊதியூரில், இரண்டு லாரிகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிறு 8ந் தேதியன்று, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஈரோடு பழனி நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, காங்கயம் வழியாக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதேநேரத்தில் தாராபுரத்தில் இருந்து காங்கயம் நோக்கி தேங்காய் தொட்டிகள் ஏற்றிய லாரி ஒன்றும் வந்துள்ளது. இந்நிலையில் ஊதியூர் அருகே இரண்டு லாரிகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் லாரிகள் மோதிய வேகத்தில் ஒரு லாரியின் டீசல் டேங்க் வெடித்ததில் தீப்பிடித்து இரண்டு லாரிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. லாரிகளில் வந்தவர்கள் இடிபாடுகளில் இருந்து வெளியேற முடியாததால் இருசக்கர வாகனம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் பிரபாகரன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானர்.
தேங்காய் தொட்டி ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநர் கார்த்தி மற்றும் அவருடன் பயணித்த ரபிளால் ஆகியோர் தீ பிடித்ததால் அவர்களுக்கும் 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.
இதில் கார்த்தி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த விபத்துக்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.