மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி… ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 50 டன் அரிசி பறிமுதல்

Author: Babu Lakshmanan
7 September 2022, 11:08 am

புழலில் தனியார் குடோனில் பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற சுமார் 50 டன் ரேஷன் அரிசி மூட்டை மூன்று லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அடுத்த புழலில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி ஆபாஷ்குமாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராம்நகர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு, ஆந்திராவிற்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது.

மேலும், குடோன் முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திராவிற்கு கடத்துவதற்காக பதுக்கிய சுமார் 50 டன் ரேஷன் அரிசி மற்றும் 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக ஜோஷ்வா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!