இங்க மலிவு.. ஆனா அங்க பவுசு : 750 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயற்சி : இளைஞர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 10:13 pm

கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 750-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கேரள இளைஞரை கைது செய்தனர்.

கோவை காந்திபார்க் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவுக்கு கடத்த ரேசன் அரிசி சேகரிப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் இன்று காலை 6 மணி அளவில் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் கோவை காந்தி பார்க் – தடாகம் ரோடு சந்திப்பு அருகில் வந்த Tata Ace நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, தலா 25 கிலோ எடை உள்ள 30 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 750 கிலோ பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெபேஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர், மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 587

    0

    0