19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்… உயிரிழந்தவர்களுக்கு படையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்திய உறவினர்கள்..!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 10:12 am

சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 19ம் ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில் 6,ஆயிரத்து 60 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை, ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதைப்போல் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உயிரிழந்த உறவினர்களுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், படையல் இட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலோர மீனவ கிராமங்களில் அங்குள்ளோர் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கண்ணீர் அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 427

    0

    0