செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் வழியில் வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. டெல்லி பறந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்..!
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6ஆவது நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டிடிஎப் வாசன் மன்னிப்பு கோரியதால், அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, 10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
மேலும் படிக்க: டெல்லியில் குவியும் தலைவர்கள்.. ஆட்சி அமைக்கும் இந்தியா கூட்டணி?.. உத்தவ் தாக்கரே ஆருடம்..!
இந்நிலையில், டிடிஎப் வாசன் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக மதுரை அண்ணாநகர் காவல்துறை நோட்டீஸ் கொடுத்தனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறையிடம் 2 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார். இந்த நிலையில், இன்று தனது செல்போனை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் டிடிஎப் வாசன் ஒப்படைத்தார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.