தஞ்சாவூரில் போட்டியிடுகிறாரா டிடிவி தினகரன்? ஜனவரி மாதத்தில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு? வெளியான தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 7:46 pm

தஞ்சாவூரில் போட்டியிடுகிறாரா டிடிவி தினகரன்? ஜனவரி மாதத்தில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு? வெளியான தகவல்!

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாக கூறுவது யூக அடிப்படையிலான தகவல். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லலை.

சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது என கூறினார்.

மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்