நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது அமமுக தான் என்று டிடிவி தினகரன் கூறியதற்கு அமைச்சர் துரைமுருகன் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 84 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,011 மாணவர்கள் 5,842 மாணவிகள் என மொத்தம் 9,853 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 4.75 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுகாஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருவலம் பள்ளியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், படிப்பு என்பது மனோநிலையை பொறுத்தது. அந்த மனோநிலைக்கு ஏற்றபடி கட்டிடங்கள் இருக்க வேண்டும். பள்ளிகள் சுத்தமாகவும், நல்ல ஆசிரியர்கள் இருந்தால்தான், நாம் படிப்பதற்கு உற்சாகமாக இருக்கும். கட்டிடங்களுக்காகவே நான் படித்து பட்டங்களை பெற்றவன்.
திருவலத்தில் உள்ள இந்த பள்ளி கட்டிடம் மிகக் குறுகியதாக உள்ளது. இதுகுறித்து கேட்டால் இதுதான் பாதுகாப்பாக உள்ளது எனக் கூறுகிறார்கள். பாதுகாப்பாக கொடுப்பதற்கு இது ஜெயில் அல்ல. மனோநிலையை வகுக்கின்ற பள்ளிக்கூடம், இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஆசிரியர் பெருமக்கள் உங்களுக்கு கற்பிக்கிறார்களே, அந்த ஆசிரியர் பெருமைகளுக்கு எல்லாம் என் தலை சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சென்று பார்த்த பள்ளிகளிலேயே என் புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரிய பள்ளி திருவலம் பள்ளி தான்.
விலையில்லா சைக்கிள் என்ற சொன்னேன் இல்லை. அனைத்தும் விலை கொடுத்து வாங்குகின்றோம். ஒரு சும்மா அப்படி சொல்லுகிற கதை தான். ஓசியில் கொடுத்தார்கள் என சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் விலையில்லா சைக்கிள் என கூறுகிறோம். சைக்கிள் ஓட்டுவது என்பது உடம்பிற்கு உள்ளத்திற்கும் ஒரு உறுதியை ஏற்படுத்தும், என பேசினார்.
ஆளுநர் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்கள் முதலமைச்சர் ஆளுநர் குறித்து என்ன பேசுகிறாரோ, அதையே தான் நாங்களும் கூறுகிறோம், என்றார்.
மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை டிடிவி அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி தான் தீர்மானிக்கும் என டிடிவி தினகரன் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு ,பதில் அளிக்காமல் காதை மூடிக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன். ஆட்சி கவிழும் சூழலை உருவாக்க வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.