கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் செந்தில் பாலாஜி… திமுகவை நம்பி பலிகடா ஆகிவிட்டார்; டிடிவி தினகரன்..!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 6:06 pm

கூடா நட்பு கேடாய் முடிவதற்கு உதாரணம் ஆக திமுகவுடன் கூட்டணி வைத்து செந்தில் பாலாஜி பலிகடா ஆகிவிட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் உள்ள ரவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பொறுப்பாளர்களின் செயல்பாடுகள், கள நடவடிக்கைகள், பிரச்சார அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த தினகரன் கூறியதாவது :- பாரதப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கட்சியாக அமமுக இருக்கும். மக்கள் தொகை கணக்கீட்டின்படியே இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக இட ஒதுக்கீடு அறிவித்து ஏமாற்றியது. அவர்களின் துரோகத்திற்கு ஏற்ப தண்டனையை சிறுபான்மை மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வழங்குவர்.

எடப்பாடி பழனிசாமி பதவிக்காக கழுத்தையும் பிடிப்பார். காலையும் பிடிப்பார். கோடநாடு வழக்கில் குற்றவாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும், என்றார்.

தொடர்ந்து, திமுக அரசை குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறரை லட்சம் கோடிகள் பெற்றதை சாதனையாக திமுக கூறி வார்த்தை காலங்களில் ஓட்டி வருகிறது. இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி என அரசியல் கட்சிகள் கூறிவரும் நிலையில், தேர்தல் முடிவுக்கு பின்னர் மக்கள் யாரை ஏற்றுக் கொண்டனர் என்பது தெரியவரும்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசியல் செய்வதாக அமைச்சர் கூறும் நிலையில், திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசியல் செய்வதாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நெருங்கி பழகிய செந்தில் பாலாஜி கூடா நட்பு கேடாய் முடிந்ததற்கு உதாரணமாக, திமுகவோடு இணைந்து பலிகெடா ஆகிவிட்டார். அவர் நல்ல முறையில் உடல் நலத்துடன் வெளியே வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம், என்றார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 362

    0

    0