சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய சுரங்கப்பாதை… பயன்படுத்தாத மேம்பாலத்தால் பெருகும் குற்றங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 4:30 pm

தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு பல மணி நேரங்கள் கடக்கும் நிலையில், பழமை வாய்ந்த மேம்பாலங்களில் ஒன்று வடகோவை மேம்பாலம்.

இந்த மேம்பாலத்தில் இருந்து சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல இரு சக்கர மற்றும் ஆட்டோக்கள் மட்டும் பயன்படுத்தபட்டு வரும் மேம்பாலம் கீழ்பகுதியில் சுரங்க பாதைகளும் உள்ளது.

இந்நிலையில் சென்ட்ரல் திரையரங்கில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் போது உள்ள ஒரு பாதையில் வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், மேலும் மது பிரியர்கள் மது பாட்டில்களை அந்த சாலையில் விட்டு செல்வதும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் கோவையில் பிரதான மேம்பால சாலை மோசமாக அவல நிலையில் உள்ளது. மேலும் மோசமான சாலையாக மாறி வரும் அந்த சாலையை தூய்மைப்படுத்தி பராமரித்து வந்தால் மட்டுமே இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

  • Chennai 28 part 3 விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!