வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரத்தில் திருப்பம்.. கோவை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 11:14 am

கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் தினமும் கோவை மாநகராட்சியில் சேகரமாகும் ஆயிரம் கண் அளவிலான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் தீ விபத்தால் ஏற்படும் புகை உள்ளிட்டவைகளால் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்து அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. இதனை அடுத்து இந்த குப்பை கிடங்கிற்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை 2018 ஆம் ஆண்டு அகற்றும் படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை, கோவை மாநகராட்சி பின்பற்றவில்லை.

ஒரு ஆண்டில் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என கொடுத்த உறுதிமொழி பின்பற்றப்படவில்லை. ஆறாண்டுகள் ஆகியும் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றாதது ஏன் என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி, கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் நிறுவனர் வே. ஈஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

மாநில பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டது. கடந்த 14ஆம் தேதி பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், கோவை மாநகராட்சி குப்பையை அகற்றம் செய்ய என்ன என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டள்ளது என கேள்வி எழுப்பியது. கோவை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெள்ளலூர் குப்பைகளை அகற்ற கோவை மாநகராட்சி பகுதியில் 35 இடங்களில் பரிச்சாத்த முறையில் குப்பை மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக பொய் தகவலை கூறி இருக்கிறார்.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் 81% கொட்டப்பட்ட குப்பை, தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொய் தகவலை பசுமை தீர்ப்பாயத்தில் பதிவிட்டுள்ளதாக வெ. ஈஸ்வரன் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிக்குள் 65 இடங்களை தேர்வு செய்து, மாநகர குப்பைகளை சுற்றுச்சூழல் மாசுபடாதபடி அழிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மூன்றாம் தேதிக்குள், கோவை மாநகராட்சி ஆணையர் இதற்கான தீர்வை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0