டிவி மெக்கானிக் அரிவாளால் வெட்டிப் படுகொலை : சில மணி நேரங்களில் குற்றவாளிக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 4:45 pm

நத்தம் அருகே டி.வி. மெக்கானிக் அரிவாளால் வெட்டி கொலை கொலை செய்த உதயக்குமாரை கிராம மக்கள் தாக்கியதில் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா டி.வி மெக்கானிக்யாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று ஊரில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை சாரமாரியாக தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்த கிராம மக்கள் உதயகுமாரை பிடித்து சராமரியாக தாக்கியதில் கொலை செய்த உதயக்குமார் பலத்த காயத்துடன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பட்டப்பகலில் டி.வி. மெக்கானிக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெட்டிகொலை செய்து இறந்து போன உதயகுமார் மீது நத்தம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!