மீண்டும் நம்பிக்’கை’யை நினைவுபடுத்திய விஜய்.. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு!

Author: Hariharasudhan
29 January 2025, 5:56 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அதன் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை: விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரித்தார் விஜய்.

இதில் முதற்கட்டமாக, 19 கட்சி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, நாகை, மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை தொடங்கியது. இதில், விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உள்ளிட்டோர் நிர்வாகிகளைச் சந்தித்து நேர்காணல் நடத்தினர்.

TVK Vijay

தொடர்ந்து, இந்த ஆலேசானைக் கூட்டத்தில் பேசிய விஜய், “உங்களை நம்பியே மக்களுக்காக இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும், எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள், பயணித்தீர்கள்.

இதையும் படிங்க: ரயிலில் கூட்ட நெரிசலால் கால்களை இழந்த இளைஞர் : துடிதுடிக்க உயிரிழந்த பரிதாபம்!

உங்களது நீண்ட கால கோரிக்கையாக, நாம் தற்போது கட்சியைத் தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் சேர்ந்தே பயணிப்போம், நிச்சயம் 2026ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம். இதற்கு முன்பு, நாம் மக்களுக்கு சேவையற்றியதை விட, இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அதிமுக உடன் தவெக கூட்டணி அமைக்கும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கும் நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது காங்கிரஸும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu