ஈரோட்டில் மீண்டும் இடைத்தேர்தல்… பதம் பார்க்க களமிறங்கும் தவெக : அரசியலில் திருப்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2024, 1:59 pm

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை உடல்நலக்குறைவால் திடீர் காலமானார். இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

EVKS Death By poll in Erode

அரசியலில் மூத்த தலைவராக இருந்த ஈவிகேஎஸ், போன வருடம் தனது மகன் திருமகன் ஈவெரா இறப்பை சந்தித்தார். கிழக்கு தொகுதியில் அவர் எம்எல்ஏவாக இருந்த போதே இறந்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

அதில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி பணத்தை வாரி இறைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: ஒரு ஆண்டுக்குள் பெரியார் வீட்டில் அடுத்தடுத்து சோகம்.. சிவாஜி முதல் ஸ்டாலின் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த பாதை!

இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜய், வேட்பாளரை களமிறக்கி பலத்தை நிரூப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணிக்கே மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும். ஈவிகேஎஸ் மகன் திருமகன் மறைவு, ஈவிகேஎஸ் மறைவு என அடுத்தடுத்து சோகத்தால் அனுதாப ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும்.

Vijays TVK Contest in Erode Election

அது மட்டுமல்லாமல், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் போட்டியிடாது என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 136

    0

    0

    Leave a Reply