அதிகாலையில் விஜய்க்கு வந்த மரண ஓலம்… பரிதாபமாக பலியான தவெக நிர்வாகி!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2025, 9:30 am
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் பெட்டி தேய்க்கும் தொழிலாளி அப்புசாமி -செந்தாமரை தம்பதி.
இவர்களது மகன் சத்யானந்த் வயது 28. இவர் ஏசி மெக்கானிக்காக ஈரோட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் பவானி வட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஒன்றிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பள்ளி பாளையத்தில் பணிகளை முடித்துவிட்டு ஈரோடு நோக்கி செல்வதற்காக சத்தியானந்த் தனது நண்பருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, பள்ளிபாளையம் புதிய காவிரி ஆற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்று புது பாலத்தின் மேலே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது .
இதையும் படியுங்க: சீமானுக்கு நாகரீகமே தெரியாதா? அவரோட கல்வி தகுதி என்ன? வருண்குமார் ஐபிஎஸ் வக்கீல் ஆவேசம்!
அந்த வேகத்தடை சரிவர தெரியாததால் வேகமாக வந்த சக்தியானந்த் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து அங்கு உள்ளவர்கள் அவரை உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பரிதாபமாக அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் செந்தாமரை கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது .
தொடர்ந்து இந்த வேகத்தடையால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்ட நிலையிலும். உரிய நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியப் போக்காக இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.