வருங்கால முதலமைச்சர் விஜய்.. பெரியாருக்கு மரியாதை செலுத்தும் போது தவெக கோஷம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2024, 12:52 pm

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரூர், திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படியுங்க : விசாரணைக்கு ஆஜரான அல்லு அர்ஜூன்.. கைது செய்ய தீவிரம்.. போலீஸ் குவிப்பு!

மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பல்வேறு அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என சுமார் 100 பேர் கட்சி கொடியினை கைகளில் ஏந்தியபடி கலந்துகொண்டு, பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Future CM Vijay Slogans By TVK Executive

பெரியார் சிலைக்கு அஞ்சலி செலுத்திய அவர்கள், பெரியார் புகழ் ஓங்குக, பெரியார் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் தளபதி விஜய் வாழ்க என கோஷம் எழுப்பினர்.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?