பதவியை பறித்த விஜய்.. மருத்துவமனையில் தவெக நிர்வாகி கவலைக்கிடம்.!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2024, 12:36 pm
பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வத்தலக்குண்டு அருகே எழில் நகரை சேர்ந்தவர் அபினேஷ் (26) தமிழக வெற்றி கழகத்தில் வத்தலக்குண்டு ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
பதவியை பறித்த விஜய் : தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி
இந்நிலையில் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடி மேடை கல்வெட்டில் வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபினேஷ் உள்ளிட்ட த.வெ.க கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் கொடியேற்று விழா தினத்தன்று புதியவர்களுக்கு பதவி வழங்கிய மாவட்ட தலைவர் தேவாவை கண்டித்து போராட்டம் நடத்தினர்
இந்நிலையில் பதவி பறிக்கப்பட்டதாக எண்ணிய அபினேஷ் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
இதையும் படியுங்க: ரசிகர்கள் செய்த வேண்டாத வேலை.. போன் போட்ட எச்சரித்த ரஜினிகாந்த்!!
அவரை உடனடியாக மீட்ட பெற்றோர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக முழுவதும் புதிய நிர்வாகிகள் பொறுப்புகள் என வழங்கப்பட்டு கட்சி கட்டமைப்புகள் ஏற்படுத்தாத நிலையில் பதவிக்காக போராட்டம் ஆர்ப்பாட்டம் தற்கொலை முயற்சி என்ன தமிழக வெற்றிக் கழகத்தில் குழப்பம் நீடித்து வருவது தொண்டர்களான ரசிகர்களை கட்டுக்கோப்பாக வைத்து இயக்கத்தை நடிகர் விஜயால் வழிநடத்த முடியுமா என்ற கேள்வி பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.