அரியலூரில் இறங்கிய தவெக கொடி.. புஸ்ஸி ஆனந்தால் உட்கட்சி பூசலா? பகீர் காரணம்!

Author: Hariharasudhan
23 December 2024, 11:59 am

அரியலூரில் தவெக பெண் நிர்வாகி விலகியதற்கு திமுக, விசிக நிர்வாகிகளான அப்பெண்ணின் உறவினர்களே காரணம் என வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கார்குடி காலனி தெருவில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தில் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என பிரியதர்ஷினி கூறியுள்ள்ளார்.

இதனையடுத்து, இதனை காரணமாக வைத்து, பிரியதர்ஷினி உள்பட 10க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவெகவில் இருந்து கூண்டோடு விலகி உள்ளனர். மேலும், அவர்கள் அப்பகுதியில் ஏற்றப்பட்டு இருந்த தவெக கொடியை இறக்கினர். இந்த சம்பவம் தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், “கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தலைவர் விஜய் கூறி இருக்கிறார். ஆனால், மாவட்ட நிர்வாகிகளோ, அவர்களே கட்சியில் அனைத்துப் பணிகளையும் செய்ததைப் போல் காட்டிக்கொள்கிறார்கள். இதனால் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளோம்” என செய்தியாளர்களிடம் பிரியதர்ஷினி கூறினார்.

TVK Intra conflict in Ariyalur

இந்த நிலையில், தவெகவில் நிர்வாகியாக செயல்பட்டு வந்த பிரியதர்ஷினியின் இரண்டு சகோதரர்கள் திமுக மற்றும் விசிகவில் உள்ளதாகவும், எனவே, அவர்களின் வற்புறுத்தலின் பேரிலே, கொடி இறக்கப்பட்டதாகவும் புதுமையான விளக்கத்துடன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: கைதிகளை காண வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம்.. செருப்பால் அடித்த பெண்கள்!.

மேலும், சினிமாவில் விஜய்யின் வரவு – செலவு கணக்குகளை கவனித்து வந்த வெங்கட் என்ற வெங்கட்ராமன், தவெகவின் பொருளாளராக உள்ளார். ஆனால், இது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்துக்குப் பிடிக்கவில்லை என்றும், இதனால் தமிழகம் முழுவதும் இரு கோஷ்டிகள் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 42

    0

    0

    Leave a Reply