புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது.. லெட்டர் கொடுத்ததாக குற்றச்சாட்டு!
Author: Hariharasudhan30 December 2024, 5:13 pm
விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை விநியோகித்ததாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உள்பட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: அண்ணா பல்லைக்கழகத்தின் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த நிலையில், அந்தக் கடிதத்தை நகல் எடுத்து, தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய அந்த கடிதத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை தி நகர், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தை கொடுத்து வந்துள்ளனர்.
அப்போது இந்தச் செயலை அனுமதியின்றி செய்ததாகக் கூறி, தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அவர்களைக் காண தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வந்துள்ளார். எனவே, ஆனந்தையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, தவெக தலைவர் விஜய், இன்று பிற்பகல் 1 மணியளவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினார். அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபீஸ் வரை சென்ற சூரி விவகாரம்.. மதுரையில் வெடித்த பூகம்பம்!
மேலும், இந்தச் சந்திப்பின் போது பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த நிலையில், விஜய் முதல் முறையாக ஆளுநரைச் சந்தித்தது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.