திமுகவில் இருந்து என்ன பயன்? தவெகவுக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை.. முக்கிய சங்கம் திடுக் கருத்து!

Author: Hariharasudhan
6 March 2025, 12:00 pm

தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை: 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில், அரசாணை 149ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்​சியில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்டம் நடைபெற்றது. இதில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான கே.எம்​.​கார்த்திக் கலந்து கொண்டு ஆசிரியர்​களுக்கு ஆதரவாக பேசினார்.

அது மட்டுமல்லாமல், ஆசிரியர் சங்கத்தின் தேனி மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தி​ய​வாணி பேசுகையில், “நான் 16 வயதில் இருந்து விஜய் ரசிகை. அவர் சினிமாவில் மனிதன் என்றால், பொது வாழ்க்​கையில் மாமனிதன். நிச்சயம் அவரால் நமக்கு நல்லது நடக்கும்” எனப் பேசியது, ஆசிரியர்களிடம் கைதட்டலைப் பெற்றுத் தந்தது.

இவ்வாறு திமுக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்ற தவெகவினரால் வழக்கமான அரசியலே தோன்றுவதாக அரசியல் மேடையில் பேசப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து பிரபல தனியார் நாளிதழிடம் பேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்​கோவன், “நான் மதுரை பழங்காநத்தம் திமுக மாணவரணி துணை அமைப்​பாளராக எட்டு ஆண்டு ​காலம் இருந்​துள்​ளேன்.

TVK Vs DMK

இவ்வாறு இருந்தும் என்ன பயன்? இந்த ஆட்சியைக் கொண்டு வர நாங்கள் பக்கபலமாக இருந்​துள்​ளோம். ஆனால், திமுக ஒன்றிரண்டு பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. சொன்னது எல்லாமே பொய்தான். நடப்பது கலைஞர் ஆட்சியே இல்லை. தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை.

இதையும் படிங்க: 8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!

அதிமுக ஆட்சியில் 28 போராட்​டங்களை நடத்திய நாங்கள், திமுக ஆட்சியில் 52 போராட்​டங்களை நடத்தி இருக்கிறோம். திமுக​காரனைத் தவிர்த்து வேறு யாராலும் எங்களை வீழ்த்த முடியாது என ஸ்டாலின் கூறுவார். இப்போது போராடி வரும் நாங்கள் அனை​வரும் ஒரு காலத்தில் திமுககாரர்கள்தான் என்பதை அவர் உணர வேண்​டும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!
  • Leave a Reply