நேற்று நடந்தது மாநாடு அல்ல…. சினிமா பட ஷூட்டிங்..பாஜகவின் C TEAM தான் த.வெ.க : திமுக அமைச்சர் கதறல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2024, 10:31 am

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தனது கட்சியை A டீம் B டீம் என சொல்வார்கள் என நடிகர் விஜய் கூறினாலும் அவர் பாஜகவில் சீ டீம் தான்.

திராவிடம் மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

எங்களது கொள்கைகளுக்கு அவர்கள் விளக்கம் மட்டுமே மாநாட்டில் கொடுத்துள்ளனர். மு.க .முதல்வர் முன்னெடுத்து செல்லும் கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியில் இருந்து யாரும் பிரித்து விட முடியாது.

நேற்று நடைபெற்றது மாநாடு என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் என்றே சொல்லலாம், தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் ஆட்சிக்கு வரட்டும் அதன் பின்பு கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றி பார்க்கலாம்.

திமுகவின் கூட்டணியை யாரும் உடைத்து விட முடியாது முதல்வரின் பாசத்தால் கூட்டணி தலைவர்கள் கட்டுப்பட்டு உள்ளனர். ஆகவே எங்களை விட்டு யாரும் போக மாட்டார்கள்.

அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றி பேசவில்லை அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இருப்பதற்காகத்தான் விஜய் அவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

பாஜகவிற்கு வலுவூட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதிமுக குறித்து விஜய் பேசவில்லை

ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011 21 வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி தான் பேச வேண்டும் 2021 26 இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை யாராலும் பேச முடியாது நாங்கள் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை.

திமுகவை தாக்கி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஏதாவது சென்று பேச முடியும் அதனால் பேசுகின்றனர்.திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வந்தவர்கள் முழுக்க முழுக்க இளைஞர்கள் தான்.

1500 மீட்டர் 1000 அடி நீளம் என்ற அளவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் அமைத்திருந்தோம் விஜயின் மாநாட்டு கூட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டி இருந்தோம்.

இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் உள்ளது. தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டு சோவை நடத்தியுள்ளனர்.

திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்ற முடியாத ஒரு சொல் அந்த சொல் முதலில் வரும் போது அதன் பின்பு எந்த சொல் வந்தாலும் பிரச்சனை இல்லை நாங்களும் தமிழ்நாடு தான் சொல்கிறோம் திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை

சிறுபான்மையின் நலனுக்கு இந்தியாவிலேயே பல்வேறு வகையில் அதிகமாக பாடுபட்ட பாதுகாக்கும் இயக்கம் திமுக தான். அதனால் என்னென்ன பாதிப்புகளை சந்தித்துள்ளோம் என்பது நாடறியும் ஒரு முறைக்கு இருமுறை கொள்கைக்காக ஆட்சி இழந்த கட்சி திமுக

ஆளுநரை பற்றி எதிர்த்து பேசினால் தான் அது எடுபடும் தமிழ்நாடு மக்களின் விரோதத்தை சம்பாதித்து வரும் ஆளுநரை வரவேற்று பேசினால் கெட்ட பெயர்தான் வரும் என்பதால் ஆளுநர் குறித்து நடிகர் விஜய் பேசி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!