தமிழகம்

டேக் டைவர்ஷன் எடுத்த தவெக.. விஜய் எம்.ஜி.ஆர் தான்.. கமலுடன் மல்லுக்கட்டு!

விஜய், தனது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வாக்காளர்களாக மாற்றுவார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ”ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்று திடீரென போதி மரம் அடியில் அமர்ந்து ஞானம் பெற்றது போல், அறிவாலயத்தில் கலந்து கரைந்த பின் பேசி வருகிறார்கள். எம்ஜிஆர் ரசிகர்கள் வேறு, சிவாஜி ரசிகர்கள் வேறு, ரஜினி ரசிகர்கள் வேறு, மற்ற ரசிகர்கள் வேறு, எங்கள் தலைவர் விஜய் ரசிகர்கள் வேறு.

எம்ஜிஆரின் அரசியல் வெற்றியை சிவாஜி பெற முடியவில்லை. எம்ஜிஆர் தனது ரசிகர்களை அரசியல்மயப்படுத்தி வாக்காளர்களாக்கியது போல, எங்கள் தலைவர் கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் எப்படி வாக்காளர்களாக மாற்றுகிறார் என்பதை பாருங்கள்” என தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில இணை செய்தித் தொடர்பாளர் எஸ்.ரமேஷ் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் கூறியது என்ன? காரணம், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், நேற்று, “நான் 20 வருடத்திற்கு முன் அரசியலுக்கு வராததுதான் தோல்வி என நினைக்கிறேன். அப்படி வந்திருந்தால் நான் நின்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறியிருக்கும்.

ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது” எனக் கூறியிருந்தார். இந்தப் பேச்சு, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கிப் பேசியதாக பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் தான், தவெக தரப்பில் இப்படி ஒரு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக மாநில இணை செய்தித் தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை எல்லாம் உடைத்து வீர வசனம் பேசி வந்தார்களோ, இன்று அதே ஊழல் கூடாரத்தில் சுயநலனுக்காக இளைப்பாறிக் கொண்டு அவர்களுக்காக டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள்.

மக்களுக்காக மக்களை நம்பி உழைத்தால் என்றுமே மக்கள் ஆதரிப்பார்கள். பணி ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு ‘பிக்பாஸ்’ பணிகளை செய்து வந்தால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். இதனால், தற்போது மநீம – தவெக மோதல் உருவாகியுள்ளது.

அரசியலுக்கு நுழையும்போது, திராவிடக் கட்சிகளுக்கு எதிராக இருந்த கமல்ஹாசன், 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவோடு கூட்டணி வைத்தார். அப்போது பேசப்பட்ட ராஜ்யசபா எம்பி பதவியும் திமுக கூட்டணியில் கமலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: மேம் ஒரு ‘கிஸ்’அடிச்சுகிடுறேன்…நடுரோட்டில் பிரபல நடிகையிடம் அத்துமீறல்.!

இதனாலேயே கமலை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். அதேநேரம், திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்த தவெக தலைவர் விஜய், வருபவர்களை அரவணைத்து ஏற்று, அதிகாரமும் வழங்குவோம் என கூட்டணி அழைப்பையும் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்து வந்த விஜயின் தவெக, தற்போது ஒரு சீட் கூட வெல்லாத மநீமவுக்கும், சீமானின் தவெகவுக்கும் பதிலளிப்பது மதிப்பைக் குறைக்கும் என உட்கட்சி வட்டாரங்களே தெரிவிக்கின்றன. அதேநேரம், இன்னும் ஒரு தேர்தலில் கூட தவெக பங்கேற்கவில்லை என்றாலும், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதையும் மறந்துவிட முடியாது.

Hariharasudhan R

Recent Posts

அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!

விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…

2 hours ago

துறவி பாதையை கையில் எடுத்த தமன்னா… மகா கும்பமேளாவில் நடந்த ட்விஸ்ட்.!

கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…

3 hours ago

அடிச்சு தூக்கு மாமே…’குட் பேட் அக்லி’ வைப் ஸ்டார்ட்..!

அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…

4 hours ago

மருத்துவமனையில் ICU பிரிவில் பிரபல இளம் நடிகர்… அறுசை சிகிச்சை செய்ய ஏற்பாடு!

தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் இளம் நடிகர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையும் படியுங்க…

5 hours ago

நான் என்ன அவ்ளோ மோசமாகவா நடிக்கிறேன்…ராயன் பட நடிகர் வேதனை.!

சந்தீப் கிஷனின் வேதனை தமிழ் சினிமாவில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நடித்து வருபவர் நடிகர் சந்தீப் கிஷன்,இவர் முதன்முதலில் தமிழில் யாருடா…

5 hours ago

ஒரு படத்துக்கு ரெண்டு கிளைமேக்ஸ்.. தமிழ் சினிமாவுல மட்டும் இத்தனை படங்களா?

தமிழ் சினிமாவுல சில படங்களுக்கு ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கு. என்னடா இது ரெண்டு கிளமாக்ஸானு ஆச்சரியப்படறீங்களா. ரசிகர்களுக்கு பிடிக்கல, தயாரிப்பாளர்களுக்கு…

6 hours ago

This website uses cookies.