ஏப்ரலில் முழுக்கு போட நினைக்கும் விஜய்.. ஜனவரியே கட்சிக்கு கெடு.. பரபரப்பில் தவெக!

Author: Hariharasudhan
3 January 2025, 5:18 pm

ஏப்ரல் முதல் தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். இதனை அடுத்து, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை எனும் கிராமத்தில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.

அதற்கு முன்னதாகவே கட்சிக் கொடியையும், பாடலையும் வெளியிட்டிருந்த விஜய், அதற்கான விளக்கத்தையும் இந்த மாநாட்டில் கொடுத்தார். அது மட்டுமின்றி, அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் மிகவும் வெளிப்படையாக அறிவித்தார் விஜய்.

மேலும் கட்சிக்கான கொள்கைகள், செயல் திட்டங்களையும் அவர் வெளியிட்டார். இதனை அடுத்து, தமிழக அரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதேநேரம், இந்த மாநாட்டில் விஜய், அதிமுகவின் பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாததால், அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வியும் இருந்தது. ஆனால், இதற்கு கூட்டணி இல்லை என்றே தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

TVK Vijay plan to Tamil Nadu tour

இதனை அடுத்து, சமூகப் பிரச்னைகளுக்காக அறிக்கை விடத் தொடங்கினார் விஜய். இதனிடையே, கட்சியின் உள் கட்டமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த ஜனவரி மாதத்தை பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்துக்கு கெடுவாக கொடுத்து உத்தரவிட்டுள்ளார் விஜய்.

இதையும் படிங்க: அந்த கூட்டத்தை மதுரைக்குள்ள நுழைய விடமாட்டோம் : வைகோ ஆவசேம்!!

மேலும், தான் கடைசியாக கமிட் ஆகியுள்ள படத்தை ஏப்ரல் மாதம் முடித்துவிட்டு, மே மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் மிகவும் மும்முரமாக நடத்தி வருகின்றனர்.

  • Padayappa celebrates Rajinikanth’s 50 years சினிமாவில் 50 ஆண்டு சாதனை…ரீரிலீஸில் குதிக்கும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்…!
  • Views: - 95

    0

    0

    Leave a Reply