மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற தவெக பெண் நிர்வாகி.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
5 December 2024, 10:31 am

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ. பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரம்கெட்ட வேலையை செய்த தவெக பெண் நிர்வாகி!

இதே பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பிரேமா என்கிற பிரியா அவரது கணவர் சந்திரன், பிரேமாவின் தம்பி சேட்டு ஆகிய மூன்று பேரும் ஊரில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விநியோகம் செய்து வருவதாகவும் வாழப்பாடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: அதிமுக செயலாளருக்கு அரிவாள் வெட்டு.. தூத்துக்குடியில் தடியங்காயால் பிரச்னையா?

மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் பிரேமாவிடம் சென்று இதுபோன்று பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிக்க கூடாது என தெரிவித்ததை தொடர்ந்து வெளியூரிலிருந்து அடியாட்களை வர வைத்து பிரச்சனையில் தலையீடு செய்பவர்களை அடியாட்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Public Against TVK Woman Executive

இந்த தாக்குதலில் முத்து என்பவர் படுகாயம் அடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்ற பெயரில் பிரேமா என்கிற பிரியா அவரது கணவர் சந்திரன் தம்பி சேட்டு ஆகியோர் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் விபச்சாரம் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடுவதால் பெரிய ஆட்களின் துணையோடு ஊர் பொதுமக்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

Public Protest Against TVK Woman Executive

சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் கவுண்டர் சண்முகம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…