இரட்டை குழந்தை விவகாரம்.. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு எழுந்த புது சிக்கல்… ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 5:36 pm

சென்னை : திரையுலக பிரபலங்களான விக்னேஷ்சிவன் – நயன்தாரா தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டதாக வெளியிட்ட தகவலை தொடர்ந்து, புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் இருக்கை, இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார்.

இந்த இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது :- ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவம் தொடர்பாக செயல்படும். இந்த இருக்கை சேலம் விநாயகா மிசன் சார்பில் நிதியுதவியுடன் துவங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்,புதிய கண்டுபிடிப்புகளை புரிந்து கொண்டு அதனை ஏற்றுகொள்ள வேண்டும்.

தமிழகம் மருத்துவ துறையில் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளது. இதுபோன்ற புதிய துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக அமைய வேண்டும். 2047ஆம் ஆண்டு இந்தியா தன்னுடைய 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும்.

தற்போது வரை நாம் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப கருவிகளை வாங்கி வந்தோம். ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் சிப் மற்றும் semi conductor-களை எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்தோம். வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தால், அது எதற்கும் உதவாது என்பதற்காகவே, தற்போது 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி, அதனை இங்கேயே உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழகம் முன்னோக்கி இருக்கிறதோ அதே போல IOT துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும், என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இது குறித்து நாளை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், எங்கு தட்டுப்பாடு என்று புகார் வந்தாலும், அதனை 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலும், மருத்துவ பல்கலைகழக வரலாற்றில் இந்தியாவில் முதன் முறையாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்றிவு இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. சித்த மருத்துவ பல்கலைகழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டோம். ஆளுநர் எந்த முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கேள்வி எழுப்பி இருந்தார். பல்கலைகழகம் துவங்கும் நேரத்தில் எந்த முறை உள்ளதோ, அவ்வாரே நடைபெறும் என பதில் அளித்துள்ளேன். எனவே ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவிற்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பெற்றது தொடர்பாக மருத்துவ ஊரக பணிகள் இயக்குனரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஜோடி கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. அதனால் விதிமுறைகளை மீறினார்களா என அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் பேசுகையில், “கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 18வயது சிறுவனுக்கு வழங்கிய சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது. எங்கு தவறு நடந்திருந்தாலும் அதற்கு மண்ணிப்பு கோருகிறேன், வருந்துகிறேன். இனி இது போன்று நடக்காமல் மேலும் சிறப்பாக சிகிச்சையளிப்போம் என அமைச்சர் முன்பு உறுதியளித்தார்,” தெரிவித்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!