ஆருத்ரா மோசடி வழக்கில் திருப்பம் : அப்ரூவராக மாறும் ஆர்.கே. சுரேஷ்? துபாயில் பதுங்கியவரை கைது செய்ய போலீசார் தீவிரம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 6:01 pm

ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் ஆர்கே சுரோஷ் துபாயில் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கைதிகள் பரிமாற்றம் மூலம், துபாயில் துபாய் போலீஸ் மூலம் ஆர். கே சுரேஷ் கைது செய்யப்படுவார்.

இங்கே உள்ளே துபாய் கைதி ஒருவரை பரிமாற்றி அதன்மூலம் ஆர்.கே சுரேஷை தமிழ்நாடு கொண்டு வர உள்ளனர். ஆர்.கே சுரேஷ் தமிழ்நாடு வரும் பட்சத்தில் அவரை அப்ரூவர் ஆக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய “பெரிய தலைகளை ” கைது செய்ய தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 345

    0

    0