தந்தை மரணத்தில் திருப்பம்.. கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன் : பதற வைக்கும் CCTV காட்சி.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 7:59 pm

தந்தை மரணத்தில் திருப்பம்.. கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன் : பதற வைக்கும் CCTV காட்சி.!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் வசித்து வருபவர் குழந்தைவேல்(65) அவர் அதே பகுதியில் சேகோ ஆலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் சந்தோஷ் தனது தந்தையுடன் இணைந்து சேகு ஆலையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தந்தை குழந்தைவேலுவுக்கும் மகன் சந்தோஷுக்கும் கடந்த சில நாட்களாகவே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் சந்தோஷ் திருமணம் ஆகி பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தற்போது அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கடந்த பிப்ரவரி 16ம் தேதி குழந்தைவேலு தனது மகன் சந்தோஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு தந்தை மகன் இருவருக்கும் மீண்டும் சொத்து தகராறு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு தந்தை குழந்தை வேலுவை மகன் சந்தோஷ் சரமாறியாகவும் கொடூரமாக தாக்கியுள்ளார் .

மேலும் படிக்க: குடிநீர் தொட்டியில் மீண்டும்..?? புதுக்கோட்டையை விடாத ‘கருப்பு’ : குமுறும் கிராம மக்கள்!

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயடைந்த குழந்தை வேலுவை மீட்டு ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த, ஏப்ரல் 21ம் தேதி குழந்தைவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,

உறவினர்கள் குழந்தை வேலுவை அடக்கம் செய்துள்ளனர், அதன் பிறகு
கடந்த 21ஆம் தேதி உயிரிழந்த குழந்தைவேலுவை தனது மகன் தந்தையை ஆக்ரோஷத்துடன் தாக்கிய பதப்பதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருவதால், இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் போலீசார் சந்தோசஷை அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 442

    0

    0