பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் 30-ஆம் தேதி புகாரளித்தார்.
அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பணியாட்கள் ஒன்பது பேரிடம் இதுவரை விசாரணையும் நடைபெற்றது.
இந்நிலையில், விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது.
விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை அவரை போலீசார் தொடர்பு கொண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் விசாரணைக்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகைகள் வைக்கப்பட்டிருந்த நம்பர் பதிவிடக்குடிய லாக்கர் உடைக்கப்படவில்லை, லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரின் மனைவிக்கு மட்டுமே தெரியும் எனவும் 40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விளக்கம் கேட்டபோது விஜய் யேசுதாஸின் குடும்பத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் சந்தேகத்தின் பேரில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் என போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.