புதுச்சேரியில் ட்விஸ்ட்… பாஜகவில் இணைந்த முன்னாள் காவல்துறை ஐஜி… தேர்தல் களத்தில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 8:10 pm

புதுச்சேரியில் ட்விஸ்ட்… பாஜகவில் இணைந்த முன்னாள் காவல்துறை ஐஜி… தேர்தல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐஜி.சந்திரன் இன்று பாஜகவில் இணைந்தது புதுச்சேரி அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது

மக்களவை பொதுத்தேர்தலுக்காக அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தைதொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடஙகியது. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் போட்டியிடவுள்ளார். வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. ஓரிரு நாளில் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி காவல் துறையில் ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான சந்திரன் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்.பி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஐ.பி.எஸ் அதிகாரி சந்திரன் கடந்த 34 ஆண்டுகளாக புதுச்சேரியில் எஸ்.பியாகவும், டி.ஐ.ஜி மற்றும் ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையில் உயரதிகாரியாக பணியாற்றியவர் மேலும் தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளராகவும் பல மாநிலஙகளில் பணியாற்றியுள்ளர்.

பாஜக மக்களவை தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில் ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரி சந்திரனை கட்சியில் சேர்த்தது புதுச்சேரி தேர்தல் களம் பரபரப்படைந்து வருகின்றது.

மேலும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் ஒரு தரப்பு தெரிவித்து வருகிறது

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி