போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் திருப்பம் : தலைமறைவாக இருந்த ICL FINCORP நிறுவனத்தின் பெண் தலைவர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2022, 3:53 pm
கோவை குனியமுத்தூர் ICL Fincorp நிறுவனத்தில் போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவரான அந்நிறுவன கிளை தலைவர் கார்த்திகா என்பவர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ICL fincorp நிறுவனத்தின்
கோவை குனியமுத்தூர் கிளையின் தலைவராக இருந்த கார்த்திகா, மேலாளர் சரவணன், உதவி மேலாளர் ஆகியோர் போலி தங்க நகைகளை வைத்து மோசடி செய்தனர்.
598 கிராம் போலி தங்க நகைகளை வைத்து அதற்கு ஈடாக 40.80 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தணிக்கையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த கிளையின் உதவி மேலாளர் சத்யா என்பவர் கைது செய்யப்பட்டார்.
குனியமுத்தூர் கிளையின் தலைவர் கார்த்திகா, மேலாளர் சரவணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த தலைமறைவாக இருந்த கார்த்திகாவை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தப்பட்டு அவரை சிறையில் அடைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தலைமறைவான சரவணன் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கிளையின் உதவி மேலாளர் சத்யா என்பவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது – கிளையின் தலைவராக இருந்த கார்த்திகா கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0