செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதிநகர் 8-வது தெருவில் வசித்து வருபவர் மதன். இவரது மனைவி தமிழ்செல்வி. இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நேரங்களில் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி தமிழ்செல்வி திடீரென மாயமானார். இதுபற்றி அறிந்ததும் தமிழ்செல்வியின் பெற்றோர் மணிகண்டன், பல்கிஸ் ஆகிய இருவரும் மகள் காணாமல் போனது தொடர்பாக செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தமிழ்செல்வியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவரது கணவர் மதனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மதன், தமிழ்செல்வியை கடந்த 26-ந்தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள சுற்றுலா தலமான கோனே அருவி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வைத்து எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து தமிழ்செல்வியை கத்தியால் குத்தினேன். இதில் காயங்களுடன் தவித்த அவளை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்.
அதன் பின்னர் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியாது என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதைக்கேட்டு போலீசார் ஆடிப்போனார்கள். உடனடியாக மதனை அழைத்துக் கொண்டு கோனே நீர்வீழ்ச்சி பகுதிக்கு விரைந்து சென்றனர். தமிழ்செல்வியை மலைப்பகுதியில் கத்தியால் குத்திய இடத்தை மதன் அடையாளம் காட்டினார். அவருடன் சென்றிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் தமிழ்செல்வியை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து செங்குன்றம் போலீசார் ஆந்திர மாநில போலீசாரின் உதவியையும் நாடினர். கோனே அருவி ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட நாராயண வனம் பகுதியில் அமைந்து உள்ளது.
இதையடுத்து சித்தூர் மாவட்ட போலீசாரும், செங்குன்றம் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர். இருப்பினும் மலைப்பகுதியில் காயங்களுடன் போராடிய தமிழ்செல்வி என்ன ஆனார்? என்பது தெரியவே இல்லை.
தமிழ்செல்வியை, மதன் கத்தியால் குத்தியதாக கூறி ஒரு மாதம் ஆகி விட்டது. இது தொடர்பாக மதன் மற்றும் அவரது நண்பர்கள் பந்தா, சந்தோஷ் மற்றும் 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
கோனே மலைப்பகுதியில் அம்மாநில வனத்துறையினர் பொறுத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மலைப்பகுதிக்கு தமிழ்செல்வியும் மதனும் ஒன்றாக சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதே நேரத்தில் திரும்பும் போது மதன் மட்டும் தனியாக வரும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இது ஒன்றை வைத்தே மதன், மலைப்பகுதியில் தமிழ் செல்வியை விட்டு விட்டு வந்திருப்பதை போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள்.
மலைப்பகுதியில் காதல் மனைவியை கத்தியால் குத்தி போட்டு விட்டு தப்பி வந்த மதன் போலீசில் பிடிபட்டிருந்த போதிலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது.
ஒரு மாதமாகியும் தங்களது மகள் பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் தமிழ்செல்வியின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 35 நாட்களுக்குப் பின் கொலை செய்யப்பட்ட சடலத்தை ஆந்திர மாநில போலீசார் உள்ளூர் கிராம மக்கள் உதவியோடு கண்டறிந்துள்ளனர் .
அவர் அணிந்திருந்த ஆடை செருப்பு அணிகலன் உள்ளிட்ட அடையாளங்களை வைத்து
அங்கு அழுகிய நிலையில் கிடந்த மண் மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் வெளிவந்த பின்னரே உயிரிழந்த தமிழ்ச்செல்வியின் உடல் என்பது உறுதி செய்யப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாராயணபுரம் காவல் நிலைய போலீசார் தடயங்களை கை பற்றி கொலை வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மதனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் மாயமாகியதாக செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனே கஞ்சா மது போதையில் கத்தியால் குத்தி கொலை செய்து நாடகம் ஆடிய தற்போது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.